வழிபாடு

திருநள்ளாறில் சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2022-06-09 08:46 GMT   |   Update On 2022-06-09 08:46 GMT
  • பிரமோற்சவ விழா கடந்த மே 26ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • ஜூன் 7ந் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த மே 26ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஜூன் 7ந் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக இன்று காலை ( 9-ந் தேதி) தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் சிவா, மேலும் துனை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் மற்றும் பலர் மற்றும் பலர் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி மேலும் அறங்காவலர் வாரிய உறுப்பினர்கள் ஆலய நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பக்தகோடிகள் மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News