வழிபாடு

திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி

Published On 2022-08-16 06:07 GMT   |   Update On 2022-08-16 06:07 GMT
  • இளைஞர் ஒருவர் கழுமரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த பரிசுபொருட்களை எடுத்தார்.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

சாணார்பட்டி அருகே கழுமரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே ராகலாபுரம் கிராமத்தில் முத்தாலம்மன், காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்காக 60 அடி உயர கழுமரம் தயாரிக்கப்பட்டு வழுக்கும் பொருள்களான எண்ணெய் வகைகள் தடவப்பட்டு கோயில் மைதானத்தில் ஊன்றப்பட்டது.

இதில் முறையான விவாதம் மேற்கொண்ட இளைஞர்கள் போட்டிபோட்டுக்கொண்டு கழுமரம் ஏற முயன்றனர். அப்போது சிலர் வழுக்கி விழுந்தனர்.

சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்பு ராகலாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுமரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த பரிசுபொருட்களை எடுத்தார்.

இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ராகலாபுரத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News