வழிபாடு

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

Published On 2025-07-08 11:15 IST   |   Update On 2025-07-08 11:16:00 IST
  • திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
  • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் ஆனி மாதம் பவுர்ணமி வருகிற 10-ந் தேதி அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி 11-ந் தேதி அதிகாலை 3.08 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளதால் நண்பகல் நேரத்தில் கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்த்து அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் வரலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Tags:    

Similar News