வழிபாடு

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆடி களப பூஜைநாளை தொடங்குகிறது

Published On 2023-07-17 08:15 GMT   |   Update On 2023-07-17 08:15 GMT
  • ஆடி மாதம் ஆடி களப பூஜை 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
  • ஆடி களப பூஜை நாளை தொடங்கி 30-ந்தேதி வரை என 13 நாட்கள் நடக்கிறது.

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி களப பூஜை 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை 12 நாட்கள் களப பூஜையும், 30-ந்தேதி உதய அஸ்தமன பூஜை என 13 நாட்கள் நடைபெறுகிறது.

இதை யொட்டி தினமும் காலையில் கோவிலில் தாணுமாலய சுவாமிக்கும், திருவேங்கடவிண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு காலை 10 மணிக்கு மகாவிஷ்ணுவாகிய பெருமாளுக்கும், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கும் களப அபிஷேகம் நடைபெறுகிறது.

இதில் நறுமணத்துடன் கூடிய சந்தனத்துடன், பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர் ஆகியவை கலந்து தங்க குடத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து மாத்தூர் மடம் தந்திரி சஜித் களப பூஜை செய்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு களப பூஜை பிரசாதம், சிறப்பு தீபாராதனை காட்டப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News