வழிபாடு

மறைசாட்சி புனித தேவசகாயம் உயிர்தியாக விழா 12-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-01-10 11:23 IST   |   Update On 2023-01-10 11:23:00 IST
  • இந்த விழா 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
  • 14-ந்தேதி புனித செபஸ்தியார் வரலாற்று நாடகம் நடக்கிறது.

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி புனித தேவசகாயம், புனித வியாகுல அன்னை ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புனித தேவசகாயம் உயிர்தியாக விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உயிர்தியாக விழா, மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் கிடைத்து நடக்கும் முதல் விழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு கொடிவலம், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு உயிர்த்தியாகச் சுடர் அர்ப்பணம், மறைசாட்சியின் திருவிழா கொடிஏற்றம், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். கோட்டார் பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன் மறையுரையாற்றுகிறார்.

13-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி, இரவு 7 மணிக்கு குளச்சல் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்கி ஆராதனை நிறைவேற்றுகிறார். முட்டம் பங்குதந்தை அமல்ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு மறைசாட்சியின் திருப்பண்டம் முத்தி செய்யும் பவனி, 14-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 9.30 மணிக்கு மலைவலம், மதியம் 1 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு நன்றி திருவிழா திருப்பலி, இரவு 8.30 மணிக்கு சப்பர பவனி, 9.30 மணிக்கு புனித செபஸ்தியார் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணை பங்குதந்தை ரக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளரும், கவுன்சிலருமான ஜெனட் சதீஷ்குமார், துணைச்செயலாளர் சகாய செலீன் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News