வழிபாடு

ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-07-18 04:55 GMT   |   Update On 2022-07-18 04:55 GMT
  • இந்த விழா வருகிற 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
  • 26-ந்தேதி மதியம் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர்ப்பவனி நடக்கிறது.

அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. விழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடி ஏற்றுதல், தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு நகைச்சுவை இன்னிசை பாட்டுமன்றம் போன்றவை நடைபெறும்.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். வருகிற 24-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது.

25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறும். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், மதியம் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர்ப்பவனியும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் கிறிஸ்டியன், பங்கு பேரவை துணைத் தலைவர் டி.வி.சி. விட்மன், செயலாளர் ஞானசேகர், துணைச் செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பார்த்திமா மைக்கேல் ராஜன், பங்கு பேரவையினர், புனித அன்னாள் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News