வழிபாடு

தெப்பத்திருவிழா நடந்தபோது எடுத்தபடம்.


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

Update: 2023-02-08 05:27 GMT
  • சுவாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
  • தெப்பத்தில் சுவாமிகள் 5 முறை வலம் வந்தனர்.

நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதல் கோவிலான கள்ளபிரான் பெருமாள் கோவிலில் தை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7மணி அளவில் கள்ளபிரான் சுவாமி, நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.

சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தெப்பத்தில் சுவாமிகள் 5 முறை வலம் வந்தனர். அப்போது தெப்பத்தை சுற்றிலும் குவிந்திருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு 7மணிக்கு கள்ளபிரான் சுவாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிகழ்சியில் தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பாவெங்கடாசரி, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், ஆழ்வார் திருநகரி எம்பெருமான் சுவாமி, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News