வழிபாடு

ஸ்ரீவைகுண்டத்தில் வைகுண்டபதி அவதார தின கருட சேவை

Published On 2023-01-19 08:35 IST   |   Update On 2023-01-19 08:35:00 IST
  • சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
  • சுவாமி புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் வைகுண்டபதி அவதார தின கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவதிருப்பதி கோவில்களில் முதல் தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் மூலவர் வைகுண்டபதி அவதார தினத்தை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 9 மணிக்கு திருமஞ்சனம், 10 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் தாயார்களுடன் சயன குறட்டிற்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அத்யாபகர்கள் சீனிவாசன். ராமானுஜம் வாசன் சீனிவாச தாத்தம் பார்த்த சாரதி பெரிய திருவடி ஜெகநாதன் ஆகியோர் நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவித்தனர்.

மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6 மணிக்கு சுவாமி கள்ளபிரான்வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். கருட வாகனத்தில் அலங்காரம் செய்து இரவு 7.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான் காட்சி தந்தார். பின்னர் சுவாமி புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், வாசன், திருவேங்கடத்தான், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி உபயதார் சந்திரசேகர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News