வழிபாடு

திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் 55 அடியில் மிக அதிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை

Published On 2023-03-20 06:15 GMT   |   Update On 2023-03-20 06:15 GMT
  • இக்கோவிலில் மிகப்பெரிய தங்க தேர் உள்ளது.
  • ஒரே கல்லில் 55 அடியில் தயாராகிறது.

கேரள மாநிலம் திருச்சூர், பூங்குன்னம் பகுதியில் பிரசித்தி பெற்ற சீதாராமர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் மிகப்பெரிய தங்க தேர் உள்ளது. இது போல மிகஉயரமான அனுமன் சிலை ஒன்றை அமைக்கவும் கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்காக ஆந்திராவில் உள்ள நந்திகிராம் பகுதியில் அனுமன் சிலை அமைக்கும் கல் கிடைத்தது.

ஒரே கல்லில் 55 அடி உயரத்தில் அங்கு அனுமன் சிலை செய்யும் பணி தொடங்கியது. சிற்பி சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிற்பிகள் இச்சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் இச்சிலை நிறுவப்படுகிறது.

20 அடி பீடத்தில் 35 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைந்துள்ளது. வலது கை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையிலும், இடது கையில் கதாயுதத்தை ஏந்தியபடியும் சிலை அமைந்துள்ளது.

இச்சிலை தென்னிந்தியாவிலேயே மிக அதிக உயரமுள்ள சிலையாகும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Similar News