வழிபாடு

கடலில் கண்டெடுக்கப்பட்ட சண்முகர் சிலை

Published On 2025-07-04 09:53 IST   |   Update On 2025-07-04 09:53:00 IST
  • திருமலைநாயக்கர் மீது போர் தொடுத்து வென்ற டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோவிலிலும் கொள்ளையடித்தனர்.
  • கடல் சீற்றம் அதிகமானதால் அஞ்சிய டச்சுக்காரர்கள் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளை கடலில் போட்டு விட்டு சென்றனர்.

1648-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தனர். அப்போது திருமலைநாயக்கர் மீது போர் தொடுத்து வென்ற அவர்கள் திருச்செந்தூர் கோவிலிலும் கொள்ளையடித்தனர். தங்கம், வெள்ளி பொருட்களுடன் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளையும் கப்பலில் ஏற்றி சென்றனர். அப்போது கடல் சீற்றம் அதிகமானதால் அஞ்சிய டச்சுக்காரர்கள் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளை கடலில் போட்டு விட்டு சென்றனர்.

இதற்கிடையே பக்தர் வடமலையப்பரின் கனவில் தோன்றிய இறைவன், கடலில் கிடக்கும் சுவாமி சிலைகளை மீட்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி சிலரை படகில் அழைத்து கொண்டு நடுக்கடலுக்கு சென்றார். அங்கு கருட பகவான் வானில் வட்டமடித்த இடத்தில் சுவாமி சிலைகளின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்து பிரகாசமாக ஜொலித்தன. மேலும் அங்கு எலுமிச்சை பழமும் மிதந்து கொண்டிருந்தது. பக்தி பரவசத்துடன் சுவாமி சிலைகளை மீட்டு மீண்டும் கோவிலில் சேர்த்தார்.

Tags:    

Similar News