வழிபாடு

கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-08-02 10:14 IST   |   Update On 2022-08-02 10:14:00 IST
  • 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினமும் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது.
  • 14-ந்தேதி இரவும், 15-ந்தேதி ப‌க‌லிலும் தேர்பவனி நடக்கிறது.

கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதனை தொடர்ந்து பங்கு தந்தையர்கள் நடத்திய சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு வட்டார அதிபர் ஜான் திரவியம் தலைமை தாங்கினார். பங்குத் தந்தையர்கள் தேவராஜ், விசுவாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மதுரை தெற்கு வட்டார அதிபர் ஆனந்தம் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தி, கொடியினை ஏற்றி வைத்தார். கொட்டும் மழையையும் பொருட்ப‌டுத்தாமல் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி பங்கேற்றனர். முன்னதாக அவர்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் முகமது இபுராகிம், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினமும் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய நாளான வருகிற 14-ந்தேதி இரவும், 15-ந்தேதி ப‌க‌லிலும் தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையினர், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News