ராமநவமி: அயோத்தி ராமர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
- அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி:
நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமி திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ராமா் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து காணப்படுகிறது.
அயோத்தியில் சமீபத்திய நாள்களில் சுட்டெரிக்கும் அதிக வெயில் காராணமாக பொது பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ராமா் கோவிலில் இன்று நண்பகல் வரை சிறப்பு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை மீட்க அவர்கள் மீது சரயு நதிநீரை டிரோன்கள் மூலம் தெளித்து வருகிறார்கள்.இன்று இரவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
அயோத்தி நகரில் ஆங்காங்கே நிறுவப்பட் டுள்ள எல்.இ.டி. திரைகள் மூலம் கோவிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
பக்தா்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பூா்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நகருக்கு வெளியே திருப்பி விடப்பட்டுள்ளது.