வழிபாடு

பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா தேர்பவனி இன்று நடக்கிறது

Published On 2022-09-08 07:03 GMT   |   Update On 2022-09-08 07:03 GMT
  • நாளை கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
  • பெருவிழா ஆகஸ்டு 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர‌ பவனியும், திருப்பலியும் நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாளான நேற்று (புதன்கிழமை) மாலை மறைவட்ட‌ முதன்மை குரு இன்னசென்ட், `மரியாள் தியாகத்தின் சிகரம்' என்ற‌ பொருளில் திருப்பலி நிறைவேற்றினார்.

விழாவின் ‌10-ம் நாள் மற்றும் மாதாவின் பிறப்பு நாளான ‌இன்று (வியாழக்கிழமை) மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார், `மரியாள் எளிமையின் எடுத்துக்காட்டு' என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

திருப்பலி முடிந்ததும் இரவு 9.30 மணிக்கு மாதாவின் பிறப்பு பெருவிழா தேர்பவனி நடக்கிறது. மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடக்கிறது.

தேர்பவனி மற்றும் திருப்பலியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவதுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News