வழிபாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பட்டாபிஷேக திருவிழா

Published On 2022-12-19 04:45 GMT   |   Update On 2022-12-19 04:45 GMT
  • திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
  • ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி போன்றவை நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அன்னதானம் போன்றவை நடந்தன. நிகழ்ச்சியில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத்திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார். குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர்.

Tags:    

Similar News