வழிபாடு

தேர்பவனி நடந்த போது எடுத்த படம்.

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா தேர்பவனி

Published On 2022-08-16 05:08 GMT   |   Update On 2022-08-16 05:08 GMT
  • இன்று இரவு 9.30 மணி முதல் முழு இரவு ஜெபமாலை நடக்கிறது.
  • நாளை காலை 5.00 மணிக்கு நிறைவு திருப்பலியும் கொடியிறக்கமும் நடக்கிறது.

வடக்கன்குளத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 150-ம் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மறையுறை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

9-ம் நாள் விழாவான கடந்த 14-ந் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அன்றைய தினம் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது.

10-ம் நாள் விழாவில் காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் திருப்பலிகள் நடைபெற்றது. மாலையில் அன்னையின் தேர்பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணி முதல் முழு இரவு ஜெபமாலையும், காலை 5.00 மணிக்கு நிறைவு திருப்பலியும் கொடியிறக்கமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை எழில் நிலவன் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News