வழிபாடு

நாகூர் தர்கா கந்தூரி விழா நிறைவு: கொடி இறக்கப்பட்டது

Published On 2023-01-07 05:51 GMT   |   Update On 2023-01-07 05:51 GMT
  • 14 நாட்கள் நடந்த கந்தூரி விழா நிறைவு பெற்றது.
  • நிகழ்ச்சியில் தர்கா ஆதீனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாகூர் தர்காவில் 466 -வது கந்தூரி விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி பீர் அமரவைத்தல், 2-ந்தேதி சந்தனகூடு ஊர்வலம், 3-ந்தேதி ஆண்டவர் சமாதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி, 4-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

நேற்று இரவு 8.30 மணிக்கு தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவில் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது. இதற்கு தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் தலைமை தாங்கினார்.

தர்கா பரம்பரை டிரஸ்டிகள் அபுல்பதஹ் சாஹிப், ஷேக் ஹசன் சாஹிப், ஹாஜா முஹைதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாஹிப், ஹாஜா ஹுசைன் சாஹிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தர்கா ஆதீனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்கா பரம்பரை டிரஸ்டி டாக்டர் செய்யது யூசுப் சாஹிப் நன்றி கூறினார். 14 நாட்கள் நடந்த கந்தூரி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.

Tags:    

Similar News