வழிபாடு

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு

Published On 2023-07-24 02:56 GMT   |   Update On 2023-07-24 02:56 GMT
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
  • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.

பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News