வழிபாடு

கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

Published On 2023-07-09 03:29 GMT   |   Update On 2023-07-09 03:29 GMT
  • 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொடைக்கானல் ஆனந்தகிரி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி கடந்த 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அப்போது கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மறுநாள் யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு பரிவார சாமிகளுக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ம ற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

Tags:    

Similar News