வழிபாடு

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-10-07 08:25 GMT   |   Update On 2022-10-07 08:25 GMT
  • திருக்கல்யாண ஏடு வாசிப்பு 14-ந்தேதி நடக்கிறது.
  • திருத்தேர் உற்சவம் 16-ந்தேதி நடக்கிறது.

மணலிபுதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பிரசித்திப் பெற்றது.

இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியபடி பதி வலம் வந்தனர். காலை 7 மணியளவில் திருநாம கொடியேற்றப்பட்டது.

விழாவில் தலைவர் துரைப்பழம், பொருளாளர் ஜெயக்கொடி, சட்ட ஆலோசகர் ஐவென்ஸ், நிர்வாகிகள் சுந்தரேசன், மனுவேல், கிருபாகரன், பாலகிருஷ்ணன், கண்ணன், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருஏடு வாசிப்பு இரவு அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருகிறார்.

தொடர்ந்து விழா நடக்கும் நாட்களில் அய்யா வைகுண்டர் அன்னம், கருடன், மயில், ஆஞ்ச நேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வருவார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண ஏடு வாசிப்பு, சரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதியும், அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேர் உற்சவம் 16-ந் தேதியும், நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு அய்யா பூப்பல்லக்கில் பதிவலம் வருதல் மற்றும் இரவு திருநாம கொடி அமர்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News