வழிபாடு

திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிப்பட்ட காட்சி.

மகாளய அமாவாசை: தஞ்சை, நாகை பகுதி காவிரி கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Published On 2022-09-25 04:51 GMT   |   Update On 2022-09-25 04:51 GMT
  • முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர்.
  • பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.

புண்ணிய நதியாக கருதப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை ஆதிசேது கடலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர். பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.

இதேப்போல் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

இதேப்போல் டெல்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Tags:    

Similar News