வழிபாடு

பக்தர்கள் பால்குடம் எடுத்து கிரிவலம் வந்ததை படத்தில் காணலாம்.

கழுகுமலையில் கோவில் கொடை விழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம்

Published On 2023-07-01 04:55 GMT   |   Update On 2023-07-01 04:55 GMT
  • இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
  • ஜூலை 7-ந்தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

கழுகுமலை பாண்டி முனீஸ்வரர், சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த ஜூன்.23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 26-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேக, ஆராதனை நடந்தது. 28-ந்தேதி பாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 29-ந்தேதி இரவு 7 மணியளவில் ஆதிபராசக்தி கும்மி பாடல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை 9 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அக்னி சட்டி எடுத்து ஊர் விளையாடல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் பாட்டு கச்சேரி நடக்கிறது. வரும் ஜூலை 7-ந்தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News