வழிபாடு
கார்த்திகை தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
- சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை.
- மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை.
'கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியிற் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர்நாளில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் அது பணிந்தோர், கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்தி வரம் கொடுப்போம்.'
சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை. மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை. திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு.
கார்த்திகை மாதம் கிருத்திகை நாளில் மலையின் மீது 'தீப வடிவில் காட்சி தருவேன்' என்றார் சிவபெருமான். இதை காண்பவருக்கு மோட்சம் கிடைக்கும்.
அருகில் உள்ள அருணாசல புராண 159-ம் பாடல் இதன் சிறப்பை விளக்குகிறது.