வழிபாடு

பார்வதிபுரம் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2023-01-11 08:47 GMT   |   Update On 2023-01-11 08:47 GMT
  • இந்த விழா 15-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
  • தினமும் குழந்தை ஏசு ஜெபமாலை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

பார்வதிபுரம் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். வடசேரி பங்கு அருட்பணியாளர் புரூனோ மறையுரையாற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு குழந்தை ஏசு ஜெபமாலை, நவநாள், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவில் 15-ந்தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜோண்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து மற்றும் திருவிழா நிறைவு திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜேக்கப் ஆஸ்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு ஞாயிறு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் அருள் தலைமையில் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News