வழிபாடு

தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா

Published On 2023-05-30 05:35 GMT   |   Update On 2023-05-30 05:35 GMT
  • பக்தர்கள் நூற்றுக்கணக்கான ஆடுகள், சேவல்களை பலியிட்டனர்.
  • ம்மன் சிரசு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை கிராமத்தில் ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. கடந்த 15-ந் தேதி கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 26-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் ஆஞ்சநேயர் சுவாமி உற்சவமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவே அம்மன் சிரசு மிதந்து வரப்பட்டது. நேர்த்தி கடனாக கிராமமக்கள், பக்தர்கள் நூற்றுக்கணக்கான ஆடுகள், சேவல்களை பலியிட்டனர்.

தொடர்ந்து அம்மன் சிரசு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்அமலுவிஜயன், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏகாம்பரம் உள்பட குடியாத்தம் நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் நா.கோ.தேவராஜன், டி.கே.தரணி, வி.எம்.குமார், ஆர்.பிச்சாண்டி, சி.ராமமூர்த்தி, நா.மு.சங்கர் உள்பட விழா குழுவினர், தட்டப்பாறை, சின்னாலப்பல்லி கிராம பொதுமக்கள், ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News