வழிபாடு

காரப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் ஆடித்திருவிழா

Published On 2022-08-09 08:39 GMT   |   Update On 2022-08-09 08:39 GMT
  • பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
  • பக்தர்கள் வேப்பஞ்சலை செலுத்தி தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

சோளிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் கங்கை அம்மன், வேண்ட வராசி அம்மன், நாகாத்தம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் பத்து நாள் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் 10 நாள் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்றது.

ஆடித்திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். கூழ்வார்த்தல் மற்றும் புஷ்ப அலங்காரம் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை ஸ்ரீ வேண்டவராசி அம்மனுக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் வேப்பஞ்சலை செலுத்தி தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பக்தர்களுக்கு கூழ் பிர சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு நவீன புஷ்ப அலங்காரத்துடன் ஸ்ரீவேண்டவ ராசி அம்மன் திருவீதி உலா காரப்பாக்கம் முக்கிய தெருக்கள் வழியாக நடை பெற்றது. இதில் வண்ண விளக்குகள் அலங்கா ரத்துடன் வாண வேடிக்கையுட னும் கேரள வாத்தியங்கள் மற்றும் மங்கள வாத்திய இசையுடன் திருவீதி உலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்களுடன் அறங்கா வலரும் 198-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான லியோ சுந்தரம் செய்திருந்தார்.

Tags:    

Similar News