வழிபாடு

ஆஷாட நவராத்திரி: வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம்

Published On 2023-06-23 06:39 GMT   |   Update On 2023-06-23 06:39 GMT
  • ஞாயிற்றுக்கிழமை கன்னிமார் பூஜை, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
  • 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

திண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே சின்னாம்பட்டியில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கடந்த 18-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது.

அதன்படி நேற்று சிம்ஹாரூடா வராஹி ஹோமம் மற்றும் அலங்கார ஆராதனைகள் மகா பூர்ணாகுதி ஆகியவை கோவிலில் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) உன்மத்த பைரவி ஹோமம் நடைபெறுகிறது. மாதுளை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். இதேபோல் நாளை (சனிக்கிழமை) விளக்குபூஜை, காய்கறிகளால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கன்னிமார் பூஜை, மாவிளக்கு எடுத்தல், அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி சுமங்கலி பூஜையும், 27-ந்தேதியன்று தம்பதியினர் பூஜை, பொங்கல் வைத்தல், மகா வரசித்தி வராகி மூல மந்திர ஹோமம், பட்டுப்புடவை அம்மனுக்கு சமர்ப்பித்தல், மகா கலசாபிஷேகம், இரவில் அம்மன் ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கம்பிளியம்பட்டி, சின்னாம்பட்டி, வாராகிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராகி பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News