வழிபாடு

சூளை சிதம்பரேஸ்வரர் கோவிலில் 26-ந்தேதி ஆனித் திருமஞ்சன மகோற்சவம்

Published On 2023-06-24 13:40 IST   |   Update On 2023-06-24 13:40:00 IST
  • நாளை தேர் வீதி புறப்பாடு நடக்கிறது.
  • 26-ந்தேதி மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

சென்னை சூளை, ஏ.பி. ரோட்டில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி (திங்கட் கிழமை) ஆனித் திருமஞ்சன மகோற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஆனி தரிசனம் மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.

முன்னதாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மகா தீபஆராதனையும், 8 மணிக்கு தேர் வீதி புறப்பாடும் நடக்கிறது. 26-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News