வழிபாடு

இடைப்பாளையம் ஸ்ரீமன் அய்யா வைகுண்டர் அலங்காரபதியில் ஆடி திருவிழா

Published On 2023-07-15 07:28 GMT   |   Update On 2023-07-15 07:28 GMT
  • விழா 23-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
  • 21-ந்தேதி அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

சென்னை செங்குன்றம் அருகே இடைப்பாளையத்தில் ஸ்ரீமன் அய்யா வைகுண்டர் அலங்காரபதி அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 23-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவில் தினமும் இரவு ஏடுவாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 21-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 22-ந்தேதி சனிக்கிழமை இரவு விளக்கு பூஜை மற்றும் அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 23-ந்தேதி ஞாயிற்றுக்கி ழமை மாலை 5 மணிக்கு செங்குன்றம் காந்தி நகர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இருந்து அய்யா கருட வாகனத்தில் அலங்காரபதிக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் அய்யாவுக்கு சுருள் மற்றும் பலகார பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வருகிறார்கள். இரவு 7 மணிக்கு பக்தர்கள் அய்யாவுக்கு நேமிசம் செலுத்தும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் மற்றும் தீராத நோய் தீர வத்தல் பால் அருந்தும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொள்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ். ரமேஷ் அய்யா, தர்மகர்த்தா ஏ. ஹரிஷ் சிவாஜி அய்யா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News