வழிபாடு
சூரிய பகவான்

சூரியனை வணங்குங்கள்...

Published On 2022-05-31 08:33 GMT   |   Update On 2022-05-31 08:33 GMT
சிவபெருமானின் எட்டு மூர்த்தங்களில் ஒருவராகவும், ஈசனின் வலது கண்ணாகவும் இருப்பதால் 'சிவசூரியன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
பகவத் கீதையில், 'ஆதித்யானாம் அஹம் விஷ்ணு' என்கிறார் கிருஷ்ணர். இதற்கு 'நானே சூரியனாக இருக்கிறேன்' என்று பொருள். மகாவிஷ்ணு போல் சங்கும், சக்கரமும் ஏந்தியிருப்பதால், சூரியனுக்கு 'சூரிய நாராயணன்' என்ற பெயரும் உண்டு. சிவபெருமானின் எட்டு மூர்த்தங்களில் ஒருவராகவும், ஈசனின் வலது கண்ணாகவும் இருப்பதால் 'சிவசூரியன்' என்றும் அழைக்கப்படுகிறார்.

சூரியன் இந்த உலகை வலம் வரும் தேர், ஒரு ரத சப்தமி நாளில் மகாவிஷ்ணுவால் வழங்கப்பட்டது. 'காலம்' என்னும் ஒற்றை சக்கரம் கொண்டது இந்தத் தேர். அதில் 7 குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்ற பெயர்களைக் கொண்ட, சூரியனின் தேரில் பூட்டப்பட்ட ஏழு குதிரைகளும், வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கின்றன.

சூரியனின் காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயத்தை தினமும் படித்து வந்தால், சூரியனின் அருளால் உடல்நலம் சிறப்பாக இருக்கும். சூரியனை மட்டும் வழிபடும் வழக்கம் உள்ளவர்களை 'சவுமாரம்' என்ற சமயத்தவராக குறிப்பிடுகின்றனர். இந்த சமயத்தினர் முன்காலத்தில் சூரியனுக்கு ரத்தத்தை கைகளில் அள்ளி சமர்ப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். ஆதிசங்கரர் இந்தப் பழக்கத்தை தடுத்து நிறுத்தினார்.
Tags:    

Similar News