வழிபாடு
சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-05-31 09:20 IST   |   Update On 2022-05-31 09:20:00 IST
சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 6-ந்தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு வெவ்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
சிவகாசியில் உள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா வந்தார். இன்று (31-ந்தேதி) முதல் 6-ந்தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு வெவ்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

7-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து 8-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

அன்று இரவு 8 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ந்தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News