வழிபாடு
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் புராண நிகழ்ச்சி

அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் புராண நிகழ்ச்சி

Published On 2022-05-25 03:20 GMT   |   Update On 2022-05-25 03:20 GMT
காரைக்காலில் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் புராண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்காலை அடுத்த அம்ப கரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்த அசுரன் அம்பரனை பத்ரகாளியம்மன் சம்ஹாரம் செய்த புராண நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்பாள் புஷ்ப பல்லக்கு வீதியுலா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம் கோவிலில் நடைபெற்றது.

பின்னர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News