வழிபாடு
திருவாடானை சினேகவல்லி அம்மன்

திருவாடானை சினேகவல்லி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா 3-ந்தேதி தொடக்கம்

Published On 2022-05-24 04:11 GMT   |   Update On 2022-05-24 04:11 GMT
திருவாடானை சினேகவல்லி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் ராணி சேதுபதி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் சினேக வல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் பாண்டியநாட்டு 14 ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாடானை சினேகவல்லி அம்மன் வைகாசி விசாக திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி சுவாமி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.12-ந்தேதி 10-ம் திருநாளையொட்டி தீர்த்தவாரி உற்சவமும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள், தேவஸ்தான அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News