வழிபாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் கொறடு மண்டபம் தயார்படுத்தும் பணி தீவிரம்

Published On 2022-05-23 07:46 GMT   |   Update On 2022-05-23 07:46 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வசந்த உற்சவம் தொடங்குகிறது. அன்று உற்சவருக்கும், சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானைக்கு மாககாப்பு கட்டுதல் நடக்கிறது.

இதையடுத்து கோவிலுக்குள் வசந்த மண்டபத்தில் 9 நாட்கள் தினமும் இரவு 7 மணிஅளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) விசாக விழா கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி விசாக கொறடு மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முகப்பெருமாள் எழுந்தருளுவார். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளக்கூடிய சண்முகப் பெருமானுக்கு காலையில் இருந்து மாலைவரை இடைவிடாது குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெறும். விசாக திருவிழாவையொட்டி துணை கமிஷனர் சுரேஷ் மேற்பார் வையில் கோவிலுக்குள் உள்ள கொறடு மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் சுத்தப்படுத்தப்பட்டு மெருகு ஏற்றி தயார்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
Tags:    

Similar News