வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்போற்சவம் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்போற்சவம் நிறைவு

Published On 2022-03-18 12:43 IST   |   Update On 2022-03-18 12:43:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாள் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் நேற்று நிறைவு பெற்றது. அதையொட்டி நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து புஷ்கரணிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

புஷ்கரணி கரையில் உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து இரவு 7 மணியளவில் மின் விளக்குகளாலும், பல வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவத்தில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

Similar News