வழிபாடு
கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக பலன்

Published On 2022-03-16 09:24 IST   |   Update On 2022-03-16 09:24:00 IST
கும்பாபிஷேக நாள் அன்று, அந்த கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் நிகழ்த்தப்படும்.
கோவில்களில் வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அந்த ஆலயத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்தப்படும் கும்பாபிஷேகமும் அத்தகைய சிறப்புக்குரியது.

இந்த கும்பாபிஷேக காலகட்டத்தில் ஆலயத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோபுர கலசங்களில் உள்ள நவதானியங்கள் மாற்றப்பட்டு, புதிய நவதானியங்கள் வைக்கப்படும். பின்னர் கும்பாபிஷேக நாள் அன்று, அந்த கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் நிகழ்த்தப்படும். பலருக்கும் இந்த கும்பாபிஷேகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. ஆனால் கும்பாபிஷேகத்திற்கு பிறகான 48-வது நாளில், மண்டல பூஜை நடத்தப்படும்.

இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டால், கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, அந்த நிகழ்வை தரிசித்ததற்கான பலனைப் பெறலாம்.

Similar News