வழிபாடு
ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவநாதசுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் இன்று முதல் தைல காப்பு உற்சவம்

Published On 2022-01-19 10:46 IST   |   Update On 2022-01-19 10:46:00 IST
திருவந்திபுரம் தேவநாதசுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று முதல் கோவிலில் தைலகாப்பு உற்சவம் தொடங்குகிறது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன் மற்றும் தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவநாதசுவாமி எழுந்தருளினார். பின்னர் சாமி உட்புறப்பாடு நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

விழாவில் இன்று(புதன்கிழமை) மூலவருக்கு ஆபரணத் தங்கம் அகற்றி, தைல காப்பு உற்சவம் நடைபெறும். முன்னதாக உற்சவர் தேவநாத சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதை தொடர்ந்து ராஜா அலங்காரம் கலைக்கப்பட்டு மூலவர் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வரைக்கும் சுவாமிக்கு தைல காப்பு சாற்றப்பட்டு வரும்.

அதன் பின்னர் தைலக்காப்பு எடுத்துவிட்டு மீண்டும் பெருமாளுக்கு ஆபரணத்தங்கம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News