வழிபாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழக்கமான நேரத்தில் நடை திறப்பு

Published On 2022-01-18 09:18 GMT   |   Update On 2022-01-18 09:18 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) முதல் அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் 13-ந்தேதி வரையிலான மார்கழி மாதம் முழுவதுமாக தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. மேலும் மதியம் 12 மணிக்கு நடைசாத்தப்பட்டது. மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி தை மாதம் பிறந்தது.

இதனையொட்டி வழக்கமான நேரத்திற்கு நடைதிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினையொட்டி வழிபாடு தலங்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது.

அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News