வழிபாடு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து

Published On 2021-12-31 05:06 GMT   |   Update On 2021-12-31 08:28 GMT
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று காலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை வரை தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அதேபோல் அன்று இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன்கருதி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் அங்காளம்மன் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது,

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News