வழிபாடு
குறுக்குத்துறை முருகன் கோவில்

குறுக்குத்துறை முருகன் கோவிலில் இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி

Published On 2021-12-30 12:24 IST   |   Update On 2021-12-30 12:24:00 IST
குறுக்குத்துறை முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதுடன் மார்கழி மாத ஏகாதசியையொட்டி மூலவர், உற்சவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணி ஆற்றுக்குள் முருகன் கோவில் அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, கோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும், கரையில் உள்ள மேல் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து இயல்பான நீர்வரத்து உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கோவிலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இன்று (வியாழக்கிழமை) மார்கழி மாத ஏகாதசியையொட்டி மூலவர், உற்சவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக நேற்று மாலையில் உற்சவர் மேளதாளம் முழங்க மேலக்கோவிலில் இருந்து குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

Similar News