வழிபாடு
இருமுடி உணர்த்தும் தத்துவம்

இருமுடி உணர்த்தும் தத்துவம்

Published On 2021-12-06 04:55 GMT   |   Update On 2021-12-06 08:57 GMT
சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்த போது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.

அப்போது குலதெய்வமாகிய சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக்கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை சொன்னார். அவரும் அப்படி செய்தார்.

அதே பழக்கத்தைத்தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள். இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.

ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான். ஆண்டவனை நெருங்கும் வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகிவிடுகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.
Tags:    

Similar News