வழிபாடு
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கிய காட்சி.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2021-12-01 05:57 GMT   |   Update On 2021-12-01 05:57 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன சேவைகளும் ஏகாந்தத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் மேள தாளங்களுடன் கோவிலில் கஜ உருவம் தாங்கிய கொடி ஏற்றப்பட்டது.

கோவில் அதிகாரி வீரபிரம்மம் கூறுகையில் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன சேவைகளும் ஏகாந்தத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றார். கோவில் தாசில்தார் ஸ்ரீமதி கஸ்தூரி பாய், சீனிவாசுலு, பிரபாகர் ரெட்டி, அர்ச்சகர் ஸ்ரீபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News