ஆன்மிகம்
சப்தாவரண சப்பரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

கார்த்திகை மாத திருவிழா: சப்தாவரண சப்பரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

Published On 2021-11-23 08:45 GMT   |   Update On 2021-11-23 08:45 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான நேற்று சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா கொடியேற்றம் 14-ம் தேதி தொடங்கிது. இந்த திருவிழா 23-ந் தேதி வரை நடக்கிறது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான 15-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான 21-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான நேற்று சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது.
Tags:    

Similar News