தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனர்.
விழா நாட்களில் அம்மன் பல்வேறு சப்பரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த 30-ந் தேதி ஐப்பசி தேரோட்டம் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு பாகம்பிரியாளுக்கு அபிஷேகம், தீபாராதனை, 7.15 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
மாலையில் சுவாமி, பாகம்பிரியாள் அம்பாளுக்கு காட்சி தருதல் மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.