ஆன்மிகம்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் வடக்கு வாசல் திறக்கப்பட்டிருந்த காட்சி.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் வடக்கு வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-10-19 11:19 IST   |   Update On 2021-10-19 11:19:00 IST
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள வடக்கு வாசல் அடைக்கப்பட்டதால் வடக்கு வாசல் எதிரே உள்ள சன்னதி தெரு பகுதியில் பல்வேறு கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் வந்து செல்ல கோவில் நிர்வாகத்தினர் அனுமதித்தனர். பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள வடக்கு வாசல் அடைக்கப்பட்டதால் வடக்கு வாசல் எதிரே உள்ள சன்னதி தெரு பகுதியில் பல்வேறு கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.

இதனால் கோவிலின் வடக்கு வாசலை திறந்து அந்த வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் குருமூர்த்தி, பொதுமக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அறநிலையத்துறை அதிகாரிகள் தேனுபுரீஸ்வரர் கோவில் வடக்கு வாசலை திறந்து அந்த வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இதனால் தேனுபுரீஸ்வரர் கோவில் வடக்கு வாசல் பகுதி பக்தர்கள் நடமாட்டத்தால் இயல்பு நிலைக்கு திரும்பியது.

Similar News