ஆன்மிகம்
கள்ளழகர்

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமை: கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

Published On 2021-07-31 05:37 GMT   |   Update On 2021-07-31 05:37 GMT
கள்ளழகர் கோவிலில் உற்சவர் கள்ளழகர் பெருமாள் தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்குகள் ஏற்றி வழிட்டனர்.
மதுரை அருகே கள்ளழகர் கோவிலில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி காலை முதல் மாலை வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதில் மூலவர் சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் விசுவரூப அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் கள்ளழகர் பெருமாள் தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்குகள் ஏற்றி வழிட்டனர். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் மலர் மாலைகளையும், எலுமிச்சம் பழங்களையும், சந்தனங்களையும் காணிக்கையாக செலுத்தி வணங்கினர்.

அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத 2- வது வெள்ளிக்கிழமையையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News