ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவில்

சோலைமலையில் சஷ்டி பூஜை: பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம்

Published On 2021-07-30 05:58 GMT   |   Update On 2021-07-30 05:58 GMT
அழகர் மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத சஷ்டி பூஜைகள் நடந்தன.
அழகர் மலை உச்சியில் உள்ளது முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில். இந்த கோவிலில் ஆடி மாத சஷ்டி பூஜைகள் நடந்தன. இதில் மூலவர் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர், வேல்சன்னதில் விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன.

அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி அரசு வழிகாட்டுதல்படி சாமி கும்பிட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News