ஆன்மிகம்
சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் வருடாபிஷேகம்

சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் வருடாபிஷேகம்

Published On 2021-07-20 09:18 IST   |   Update On 2021-07-20 09:18:00 IST
சீதக்கமங்கலம் அபயாம்பிகை சமேத மூலநாதசாமி கோவிலில் வருடாபிஷேகம் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடவாசல் அருகே சீதக்கமங்கலம் கிராமத்தில் அபயாம்பிகை சமேத மூலநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் மூலநட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு கடந்த 2016-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது.

அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் வருடாபிஷேகம் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஜெயராமன் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.

முன்னதாக மூலநாதசாமிக்கும், அபயாம்பிகை அம்மனுக்கும் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Similar News