ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மகா புஷ்ப யாகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மகா புஷ்ப யாகம் தொடக்கம்

Published On 2021-07-17 07:09 GMT   |   Update On 2021-07-17 07:09 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 40 கிலோ கனகாம்பரம் பூக்களும், 120 கிலோ கோடி மல்லி மலர்களும் என மொத்தம் 400 கிலோ மலர்களால் புஷ்ப்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் கனகாம்பரம், கோடி மல்லி பூக்கள் உள்பட பல்வேறு வகையான மலர்களால் மகா புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி முதல் நாளான நேற்று கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாக குண்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 180 ருத்விக்குகள் நெய், பட்டு வஸ்திரம், மூலிகை பொருட்களால் யாகம் வளர்த்து, கலச பூஜை செய்தனர்.

பின்னர் மாலை மகா புஷ்ப யாகம் தொடங்கியது. அதில் 40 கிலோ கனகாம்பரம் பூக்களும், 120 கிலோ கோடி மல்லி மலர்களும் என மொத்தம் 400 கிலோ மலர்களால் புஷ்ப்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

புஷ்ப யாகத்தில் திருச்சானூரை சேர்ந்த பஞ்சரத்ன ஆகம ஆலோசகர் சீனிவாசாச்சாரிலு பங்கேற்றார். மேலும் அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் பலா் கலந்து கொண்டனர். புஷ்ப யாக நிகழ்ச்சி தேவஸ்தான பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்பட்டது.
Tags:    

Similar News