ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அனுப்பிய பட்டு வஸ்திரம்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அனுப்பிய பட்டு வஸ்திரம்

Published On 2021-07-17 06:58 GMT   |   Update On 2021-07-17 06:58 GMT
திருப்பதி ஏழுமலையானுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பாக ஆண்டு தோறும் ஆனிவார ஆஸ்தானம் அன்று பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பாக ஆண்டு தோறும் ஆனிவார ஆஸ்தானம் அன்று பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஸ்ரீரங்கத்தில் இருந்து 6 பட்டு வஸ்திரங்களை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத்துறை, கோவில் அதிகாரிகள் திருமலைக்கு கொண்டு வந்தனர்.

திருமலைக்கு கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை திருமலை ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் வரவேற்று மரியாதை செய்து பெற்றுக் கொண்டனர். பின்னர் திருமலை ஜீயர் மடத்தில் வைத்து பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து பேடி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூலவரிடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News