ஆன்மிகம்
சிறப்பு யாகம் நடைபெற்றதையும், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள் பாலித்ததையும் படத்தில் காணலாம்

சேலம் ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-07-17 06:47 GMT   |   Update On 2021-07-17 06:47 GMT
சேலம் ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தொற்று பரவல் குறைந்ததையொட்டி பூஜை செய்வதற்கு மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டன. தற்போது குறைந்த அளவு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமிதரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் முடிவடைந்தன. 9-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு யாககால பூஜை தொடங்கியது. தொடர்ந்து 9 மணிக்கு முதல் கால பூஜை நிறைவடைந்தது.

பின்னர் நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 2-ம் கால யாக பூஜை தொடங்கியது. பின்னர் மதியம் 12 மணிக்கு பூஜை நிறைவடைந்தது.

தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News